• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அருவியின் உலகமான ஜியுசைகோ காட்சித்தலம்
  2016-06-28 09:20:37  cri எழுத்தின் அளவு:  A A A   

நிகழ்ச்சியின் துவக்கதில் இந்தக் காட்சித்தலத்தின் பெயர் எப்படி சூட்டப்பட்டதை நான் உங்களுக்கு விளக்கிக் கூறினேன். இன்னும் நினைவில் இருக்கிறதா?ஒன்பது திபெத் இன கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். அதனாலே, திபெத் இனத்தின் சிறப்பு மிக்க பணப்பாடும் ஜியுசைகோ காட்சித்தலத்தின் மற்றொரு சிறப்பாகும். மர்மமான ஆதிகால மதம், ஈர்ப்பாற்றல் மிக்க பாரம்பரிய ஆடை, உற்சாகம் நிறைந்திருக்கும் பாரம்பரிய விழா முதலியவற்றை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.

மேலும், ஜியுசைகோ காட்சித்தலத்தில் நீலவண்ணமான பனி பாறை ஒன்றும் உள்ளது. செங்குத்தான பாறையில் இயற்கையாகவே உருவாகியது. வானத்தின் பிரதிபலிப்பில் அது நீலவண்ணமாக காட்சி அளித்து வருகிறது.

அழகு மிக்க இயற்கை காட்சிகளைத் தவிரவும், அரிய விலங்கு மற்றும் உயிரின சுற்றுசூழலின் முக்கிய பாதுகாப்பிடம் ஜியுசைகோ ஆகும். காட்சித்தலத்தில் அரிதான 74 வகை தாவரங்களும் பாண்டா உள்ளிட்ட 18 வகையான விலங்குகளும் பேணிக்காக்கப்பட்டு வருகின்றன.

ஜியுசைகோ காட்சித்தலத்தை நேரில் கண்டுரசிக்கும் ஆர்வம் தோன்றியுள்ளதா?

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040