• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அருவியின் உலகமான ஜியுசைகோ காட்சித்தலம்
  2016-06-28 09:20:37  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜியுசைகோ காட்சிதலம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பீடபூமி வகையைச் சேர்ந்தது. அங்கு வெப்பநிலை மாறுபாடு அதிகம். அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமான ஆடைகளை அணிய வேண்டும். மேலும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் மழை காலமாகும். அதனால், இந்த மாதங்களில் இங்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம். இக்காட்சித்தலத்தை பார்வையிடுவதற்கு இலையுதிர் காலம் ஏதுவாகும்.

1992ஆம் ஆண்டு, ஜியுசைகோ உலகின் பண்பாட்டு மற்றும் இயற்கை மரபு செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. சீனர் மட்டுமல்ல, உலக மக்களுக்கான செல்வமாகவும் இது கருதப்படுகிறது. இச்செல்வத்தை நன்றாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு கொடுப்பது நம் அனைவரின் கடமையாகும்.

ஏப்ரல் முதல் நவம்பர் வரை, காட்சித்தலத்தின் நுழைவுச்சீட்டு 220 யுவானாகும். காலை 6:30 முதல் 18:00வரை பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும். நவம்பர் முதல் மார்ச் வரை, நுழைவுச்சீட்டு 80 யுவானாகும். காலை 6:30 முதல் 17:00 வரை அனுமதி. நீங்கள் அங்கு ஒன்று முதல் மூன்று நாட்களைக் கழிக்கலாம் என முன்மொழிகின்றேன்.

செங்டு நகரில் பயணம் மேற்கொண்டால்,ஜியுசைகோ காட்சிதலத்தைப் பார்வையிடாமல் திரும்ப வேண்டாம்.  


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040