• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வரலாற்று மிக்க நகர் யீபின்
  2016-09-01 09:27:04  cri எழுத்தின் அளவு:  A A A   

ஸ்வே லே சாங் லாங் என்பது அங்குள்ள மற்றொரு முக்கிய காட்சித்தலமாகும். சிவப்புக் கல்லால் கட்டியமைக்கப்பட்ட இடைகழியின் இரு பக்கங்களிலும், நெருக்கமாக வளரும் மூங்கில் மரங்கள் நிற்கின்றன. செழித்து வளரும் மூங்கில் இலைகள் வானத்தையும் மறைந்திருக்கும். பச்சை பசேல் என இருக்கும் மூங்கில் இலைகளின் கீழ் சிவப்புக் கம்பளம் போன்ற இடைகழியில் நடந்து செல்வது அருமையான அனுபவமாகும், இல்லையா?

அங்குள்ள மூங்கில் கைவினை கலை மிகவும் புகழ் பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் பக்குவம் வாய்ந்த மூங்கில் கைவினை கலை உருவாகியுள்ளது. மூங்கில் உணவுக்குச்சித் தயாரிப்புக் கலை முனைப்புடன் காணப்பட்டுள்ளது. உணவுக்குச்சியின் தலைப்பகுதியில் குழியாலான சிங்க சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அழகு மிக்க இந்த மூங்கில் உணவுக்குச்சிகள் சீனாவில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் வரவேற்கப்பட்டுள்ளன.

மார்ச் முதல் அக்டோபர் வரை, ஷுநான்ஸூஹை காட்சித்தலத்தின் நுழைவுச்சீட்டு 110யுவானாகும். இதர மாதங்களில் 60யுவானாகும். நீங்கள் ஸ்ச்சுவான் மாநிலத்தின் செங்து நகரில் புறப்பட்டால், தூரப் பேருந்தில் நான்கு மணிநேரங்களுக்குப் பிறகு ஷுநான்ஸூஹை காட்சித்தலத்துக்குச் சென்றடையலாம். அதன் நுழைவுச்சீட்டு சுமார் 118யுவானாகும்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040