• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வரலாற்று மிக்க நகர் யீபின்
  2016-09-01 09:27:04  cri எழுத்தின் அளவு:  A A A   

அடுத்து, யீபின் நகரின் மற்றொரு காட்சித்தலம் ஷிஹைதுங்சியாங். ஊசிப்பாறைக் குகைகளால் இக்காட்சித்தலம் புகழ் பெற்றுள்ளது. சீனாவில் காஸ்ட் நிலவடிவம் சீராக வளரும் பகுதிகளில் இது ஒன்றாகும். இந்த காட்சித்தலத்தில் பல்வேறு வடிவமுடைய கற்கள் வானம் தொட்டு நிற்கின்றன. கீழே ஊசிப்பாறை குகைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன.

தியேன்சுவேன்துங் எனும் காட்சித்தலம் அங்குள்ள மிகவும் புகழ் பெற்ற ஊசிப்பாறை குகையாகும். இக்குகை 30லட்சம் ஆண்டுகள் வரலாறுடையது. இது அறிவியல் ஆய்வு நிலவியலாளர்களால் பாராட்டப்பட்டுள்ளது. ஆய்வு மேற்கொள்ளத்தக்க குகை இது தான் என உலக நிலத்தின் மேலே 14 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடைய கல் காடு பரவியுள்ளது. கீழே, 26 ஊசிப்பாறை குகைகளும் பரவியுள்ளன.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040