• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நட்புப் பாலம்
  2013-04-25 17:13:16  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜெயா:இவ்வாண்டு, சீன வானொலித் தமிழ்ப் பிரிவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவாகும். 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நாள் தமிழ் ஒலிபரப்பு துவங்கிய பின், அதிகமான தமிழ் நண்பர்களின் உதவியும் ஆதரவும் கிடைத்தன.

சிவகாமி:கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்ப் பிரிவின் ஒளிமயமான சாதனைகளில், மொத்தமாக 9 தமிழ் நண்பர்கள், வெளிநாட்டு நிபுணர்களாக, தமிழ்ப் பிரிவில் சேர்ந்து, பணி புரிந்துள்ளனர்.

ஜெயா:தவிர, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலிய நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வாழ்கின்ற அதிகமான தமிழ் நேயர்களும், நீண்டகாலமாக எமது நிகழ்ச்சிகளில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். அது மட்டுமல்ல, அவர்கள் பயனுள்ள முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் வழங்கி வருகின்றனர்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040