ஜெயா: ஆண்டுதோறும் தமிழ்ப் பிரிவின் பல்வேறு பொது அறிவுப் போட்டிகளில் சிறப்பு பரிசுப் பெற்றவருக்கு சீனாவில் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கலாம். அவர்கள் தத்தமது அனுபவங்களின்படி, உண்மையான சீனாவை அறிந்து கொண்டுள்ளனர். இந்த வாய்ப்பு பெற்றவரில் ஒருவரான திருநெல்வேலி தங்க ஜெய்சக்திவேல், எமது திபெத் மரபுவழி புத்தமதத் துறவியர் மடங்கள் பற்றிய இணையதள பொது அறிவுப் போட்டியின் சிறப்பு பரிசு பெற்று, 2012ஆம் ஆண்டு, சீனாவில் இலவச பயணம் மேற்கொண்டார்.
சிவகாமி:ஆண் நேயர்களுடன் பெண் நேயர்களும் நமது நேயர்களில் அடங்குகிறார்கள். அவர்களில் மறைமலை நகர், சி.மல்லிகாதேவி, அமுதாராணி குறிப்பிடத்தக்கவர்கள். அமுதாராணி அவர்களும் அவரது தந்தையும் 1988ஆம் ஆண்டு முதல் சீன வானொலி தமிழ் நிகழ்ச்சிகளைக் கேட்கத் துவங்கினர்கள்.
ஜெயா: சீன வானொலித் தமிழ் ஒலிபரப்பைக் கேட்டு வருவோர், இந்தியா மற்றும் இலைங்கையைச் சேர்ந்த தமிழர்களைத் தவிர, உலகின் பல்வேறு இடங்களில் வாழ்கின்ற தமிழர்களில் பலரும் ஆவர். இப்போது அமெரிக்க விஸ்கான்சின் மாநிலத்தில் வசிக்கின்ற ஆல்பர்ட் நாள்தோறு இணையதளத்தின் மூலம் எமது நிகழ்ச்சிகளைக் கேட்டு இரசித்து வருகிறார்.
ஜெயா:கடந்த பல ஆண்டுகளில், தமிழ்ப் பிரிவு வெளிநாட்டுச் செல்வாக்கு ஆற்றலை ஆக்கமுடன் விரிவுபடுத்தி வருகின்றது. இலங்கை பண்பாட்டு அமைச்சர், சீனாவிலுள்ள இந்தியத் தூதரகத்தின் பண்பாட்டு அலுவலர், இந்திய மத்திய அமைச்சர் முதலிய புகழ்பெற்ற தமிழர்கள் பலர், தமிழ் பிரிவின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளனர்.
சிவகாமி:அதே வேளை, இத்தகைய நடவடிக்கைகளின் மூலம், தமிழ் பிரிவின் உலகப் புகழ் உயருகிறது. சீன வானொலித் தமிழ் ஒலிபரப்பு, அனைத்து தமிழருக்கும் தெரிந்திருக்க வேண்டுமென்ற எமது விருப்பம் நனவாக்கபடுவதும் முன்னேறி வருகிறது.
ஜெயா:எமது வெளிநாட்டு நிபுணர்ககள், நேயர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவுகளுக்கும் உதவிகளுக்கும் உளமார்ந்த நன்றியை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சிவகாமி:அடுத்த 50 ஆண்டுகளில், சீன வானொலித் தமிழ்ப் பிரிவு, மேலதிகமான வளர்ச்சியையும், மேலும் சிறந்த ஒளிமயமான எதிர்காலத்தையும் கொண்டு வளர வேண்டுமென விரும்புகிறோம்.