ஜெயா: சீன வானொலித் தமிழ்ப் பிரிவில் முழுநேரமாகப் பணி புரிந்த 9 தமிழ் நிபுணர்கள், மாதகல் கந்தசாமி, சின்னதம்பி, ந.கடிகாசலம், சிவக்குமார், ராஜாராம், ஆன்றனி கிளிட்டஸ், தமிழன்பன், பூஷ்பா ரமணி, பாண்டியன் ஆகியோர் ஆவர். அவர்களில் பேராசிரியர் முனைவர் ந.கடிகாசலம், மூன்று முறையாக ஏற்க்குறைய 12 ஆண்டுகள் சீன வானொலித் தமிழ்ப் பிரிவில் பணிபுரிந்துள்ளனர். குறிப்பாக, அவரது பங்களிப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் 2004ஆம் ஆண்டு, சீன அரசு நட்புறவு விருதை அவருக்கு வழங்கியது.
சிவகாமி:வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன், சீனப் பணியாளர்களின் தமிழ் மொழி ஆற்றல் பெரிதும் மேம்பட்டு வருகின்றது. குறிப்பாக, கடிகாசலம், ராஜாராம், கிளிட்டஸ், தமிழன்பன் முதலியோர், சீனாவில் தங்கியிருந்த போது, ஓய்வு நேரத்தில், பல தலைமுறை திறமைசாலிகளுக்கு கற்பித்துள்ளனர்.
ஜெயா:அப்போதைய அவர்களது மாணவர்கள், இப்போது தமிழ்ப் பிரிவின் வரவேற்கப்படும் அறிவிப்பாளர்களாக விளங்குகின்றனர். அவர்கள் உணர்வுப்பூர்வமாகத் தயாரிக்கின்ற பல்வேறு நிகழ்ச்சிகள் பல நேயர்களால் பாராடப்படுகின்றன.
சிவகாமி:மேலும், தமிழ்ப் பிரிவை நீண்டகாலமாக ஆதரித்து வருகின்ற நேயர்கள், நமக்கு மாபெரும் உதவிகளை வழங்கி வருகின்றனர்.
ஜெயா: முதலில் ஒரு முக்கியமான நேயரைக் குறிப்பிட வேண்டும். அவரை ஏறக்குறைய அனைத்து நேயர்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆமாம், அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் தலைவரான எஸ்.செல்வம் தான் அவர்.