• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் நீரை தெற்கிலிருந்து வடக்கிற்கு எடுத்துச்செல்வதன் திட்டப்பணி
  2013-09-10 14:31:54  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டு கோடைக்காலத்தில், சீனாவின் கிழக்கு பகுதியின் கடலோர ஜிங்ஹாங் கால்வாயில் நீர் இறைக்கும் இயந்திரங்கள் சுறுசுறுப்பாகப் இயங்கி வருகின்றன. பத்துக்கு மேலான இறைப்பிகள், யாஞ்சி ஆற்றில் நீரை இறைத்து, பழைய கால்வாய் மூலம் அனுப்பி வருகின்றன. நீரை தெற்கிலிருந்து வடக்கிற்கு எடுத்துச்செல்வதன் திட்டப்பணி, உலகில் மிக பெரிய நீர் இறைப்பு திட்டப்பணியாகும். அதன் முதலாவது கட்டப் பணித்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவது, இத்திட்டப்பணி, கடந்த 10 ஆண்டுக்காலக் கட்டுமானத்துக்குப் பின், நீரை எடுத்துச்செல்லும் கடமையை நடைமுறைப்படுத்துவதைக் காட்டுகிறது.

சீனா, நீர்வளம் மிகுந்த நாடாகும். ஆனால் பருவக்காலம், நிலவியல் ஆகியவை காரணமாக, நீர்வளம் சரிசமமாகப் பரவி இருக்கவில்லை. ஆசியாவின் சில பெரிய ஆறுகள் ஓடும் சீனத் தென் பகுதியில் தாவரங்கள் சிறப்பாக வளர்கின்றன. யாஞ்சி ஆற்றுப் பள்ளத்தாக்கு மற்றும் தெற்கு ஆற்றின் நீரோட்ட அளவு, நாட்டின் மொத்த அளவில் 80 விழுக்காடு வகிக்கிறது. ஆனால் சீனாவின் வட பகுதியில் ஆற்றின் நீரோட்ட அளவு குறைவு. பெருமளவில் மழை பெய்யாது. அங்கு வறட்சியாக இருக்கிறது. சில பிரதேசங்களில் நபர்வாரி நீர்வளம், உலகின் சராசரியான நீர்வளத்தின் பதினாறில் ஒரு பகுதியாகும். நீரை தெற்கிலிருந்து வடக்கிற்கு எடுத்துச்செல்வதன் திட்டப்பணியின் தலைமை பொறியியலாளர் ShenFengSheng கூறியதாவது

"வட பகுதியில் நீர்வளப் பற்றாக்குறையின் முக்கிய காரணமாக, கால நிலை வறட்சி, மழை பொழிவு குறைவு ஆகியவை இருக்கின்றன. மக்கள் தொகை அதிகரிப்பும், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியும், நீர்வளப் பற்றாக்குறையை மேலும் தீவிரமாக்கியுள்ளன."என்றார் ShenFengSheng.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040