• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் நீரை தெற்கிலிருந்து வடக்கிற்கு எடுத்துச்செல்வதன் திட்டப்பணி
  2013-09-10 14:31:54  cri எழுத்தின் அளவு:  A A A   

நீர் தர மேம்பாடு தவிர, அந்த நெறியின் நெடுகிலும் உள்ள இடங்களில் வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள் குறைந்து வருகின்றன. அத்திட்டப்பணி விளைவித்த பயன்களில் இதுவும் ஒன்று. கிழக்கு நெறி கரையோரத்தில் இருக்கின்ற Su Qian நகரின் ஒரு கிராமம், மிகவும் தாழ்வான இடத்தில் அமைந்துள்ளது. அக்கிராமவாசி ஒருவர் கூறியதாவது

"நீரைத் தெற்கிலிருந்து வடக்கிற்கு எடுத்துச் செல்வதன் திட்டப்பணி, எமக்கு நலன் தந்துள்ளது. வறட்சிக் காலத்தில் அதிலிருந்து நீர் பெறலாம். வெள்ளக் காலத்தில் அதன் மூலம் நீரை வெளியேற்றுகிறோம்."என்றார் அவர்.

இவற்றைத் தவிர, இத்திட்டப்பணியின் மூலம் ஜிங்ஹாங் கால்வாய், போக்குவரத்தை மீண்டும் திறந்துள்ளது. ஆயிர ஆண்டுகள் வரலாற்றுடைய கால்வாய் புத்துயிர் பெற்றுள்ளது. சீனாவில் யாஞ்சி ஆற்றுக்கு அடுத்த படியாக, அது இரண்டாவது பொன் கால்வாயாக திகழ்கிறது.

தற்போது இத்திட்டப்பணியின் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் வடிவமைப்பாளர்கள், பொறியியலாளர்கள், தொழிலாளர்கள், குடிமக்கள் ஆகியோரின் முயற்சியுடன், நீர் சிக்கனம், மாசு கட்டுப்பாடு, உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடிபெயர்ப்பு முதலிய சிக்கலான பிரச்சினைகள் படிபடியாகத் தீர்க்கப்பட்டு வருகின்றன. 2014ஆம் ஆண்டு கப்பல் நீர்த்தொட்டி, கால்வாய், குடைவழி, இறைப்பி நிலையம் ஆகியவை அடங்கிய இத்திட்டப்பணி, உலகில் புதிய பதிவை ஏற்படுத்தி, பன்முகங்களிலும் பயன்பாட்டுக்கு வர உள்ளது. சீனாவின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் குடிமக்கள், இதன் மீது நிறைய எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர்.


1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040