• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் நீரை தெற்கிலிருந்து வடக்கிற்கு எடுத்துச்செல்வதன் திட்டப்பணி
  2013-09-10 14:31:54  cri எழுத்தின் அளவு:  A A A   

மீண்டும் மீண்டும் ஆய்வு செய்து, விரிவான திட்டங்கள் வகுத்த, நிபுணர்கள் குறிப்பிடுகையில், இத்திட்டப்பணியை மேற்கொண்ட போது, உள்ளூர் நிலைமைக்கு ஏற்ப நீர் சேமிப்பு, நீர் மண் வளப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிரின வாழ்க்கை கட்டுப்பாடு முதலிய திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். முதலில் நீரைச் சிக்கனப்படுத்தி, மாசுபாட்டைக் கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். அதற்குப் பிறகு, நீரை எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். நாங்கள் இயன்ற அனைத்தையும் செய்து, பயன் பெறுவதோடு தீமைகளைத் தவிர்க்கப் பாடுபடுவோம் என்று தெரிவித்தனர். அத்திட்டப்பணி வடிவமைப்பு பணியகத்தின் தலைவர் ZhangGuoLiang கூறியதாவது

"நீரை தெற்கிலிருந்து வடக்கிற்கு எடுத்துச்செல்வது, சீனாவில் நீர் வளப் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்கும் ஒரு நெடுநோக்குத் திட்டப்பணியாகும். நீர் சிக்கனம் மற்றும் கழிவு நீர் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவது, உள்ளூர் நீர் வளப் பயன்பாட்டுக்கு நியாயமான நலன் கொடுக்கும். இவ்வகையான பல நடவடிக்கைகளை இணைத்து மேற்கொண்ட திட்டப்பணி, முக்கியத்துவம் வாய்ந்தது."என்று அவர் தெரிவித்தார்.

நீரைத் தெற்கிலிருந்து வடகிற்கு எடுத்துச் செல்லும் திட்டப்பணியின் கிழக்கு நெறி, 2002ஆம் ஆண்டின் இறுதிக்காலத்தில் துவங்கியது. இந்நெறியில் ஜிங்ஹாங் கால்வாய், அதற்கு அருகிலுள்ள கால்வாய் ஆகியவற்றின் மூலம், நீர் ஷான்துங் தீபகற்பத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதன் நெடுகிலும் பிரதேசங்களின் நகர வாழ்வுக்கும், தொழில் மற்றும் சுற்றுச்சூழல் நீர் வழங்கலுக்கும் பயன் தந்து, வேளாண் துறை, கப்பல் போக்குவரத்து முதலியவற்றுக்கும் அது நீர் வழங்குகிறது. இந்தத் திட்டப்பணி நடைமுறைக்கு வந்துள்ள 10 ஆண்டுகளில், நீர் வழங்கப்பட்ட பிரதேசங்களில் பெரும் மாற்றங்கள் காணப்படுகின்றன. ஓய்வு பெற்ற தொழிலாளர் Shen Yu Liang, கால்வாயின் அருகிலுள்ள குடிமக்கள் கட்டிடத்தில் 60 ஆண்டுகளாக வசித்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து கூறியதாவது

"தற்போது சுற்றுச்சூழல் சிறப்பாக மாறியுள்ளது. நீர் மற்றும் காற்று தரம் மேம்பட்டுள்ளது."என்று அவர் கூறினார்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040