• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் நீரை தெற்கிலிருந்து வடக்கிற்கு எடுத்துச்செல்வதன் திட்டப்பணி
  2013-09-10 14:31:54  cri எழுத்தின் அளவு:  A A A   

கடந்த பத்து ஆண்டுகளாகக் கனரகத் தொழில் துறை, வேளாண் துறை உற்பத்தி ஆகியவற்றால், சீனக் கிழக்கு பகுதியின் ஆறுகள் மாசுப்பட்டு வருகின்றன. அவற்றில் ஃபாஸ்ஃபேட்(phosphate), நைட்ரேட்(nitrate) ஆகியவை மிகுந்ததாக இருக்கின்றன. அந்த நீரைக் குடிக்க முடியாது. நீரை தெற்கிலிருந்து வடக்கிற்கு எடுத்துச் சென்ற பின், நீரின் தூய்மை தரம், குடிநீர் தரத்திற்கு உயர்வதை உறுதிப்படுத்தும் வகையில், சீனா மாசுப்பாட்டுக் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதலியவற்றுக்கு, சில ஆயிரம் கோடி யுவானை செலவிட்டுள்ளது. கிழக்கு நெறியில் 900 கிலோமீட்டர் நீளமான கால்வாயிலுள்ள ஜியாங் சு மாநிலத்தின் ஆற்றுக்கு, மொத்தம் 590 கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டது. சில நூறு காரை, நிலக்கரி மற்றும் தாள் தயாரிப்புத் தொழில் நிறுவனங்களை அகற்றியதோடு, ஆற்றின் நெடுகிலும் வசிக்கும் குடிமக்கள், மாசுப்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டுமென சீன அரசவை வேண்டுகோள் விடுத்தது. நீரை தெற்கிலிருந்து வடகிற்கு எடுத்துச் செல்வதன் திட்டப்பணி அலுவலகத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் தலைவர் Shi Chun Xian கூறியதாவது:

"ஜிங்ஹாங் கால்வாயின் இரு கரைகளிலும் பத்துக்கு மேலான குப்பையை ஏற்றிச்செல்லும் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு கப்பலும் மூன்று நாட்கள் ஒரு முறை, தரை ஏறி குப்பையை அகற்ற வேண்டும். மேலும் பதிவு மற்றும் திரட்டுதல் முறையால், கோரிக்கைகளுக்கு ஏற்ப செயல்படாவிட்டால், கப்பல் உடைமையாளருக்குத் தண்டனை விதிக்கப்படும். அவர்கள் பொருட்களைத் தொடர்ந்து ஏற்றிச்செல்வது, தடை விதிக்கப்படக் கூடும். கப்பல்கள் ஓடும்போது கழிவு எண்ணெய் வெளியேறுகிறது. எனவே கழிவு எண்ணெய் சேகரிக்கும் நிலையம் நிறுவியுள்ளோம். ஒவ்வொரு கப்பலும், மூன்று திங்களுக்கு ஒரு முறை கழிவு எண்ணெயை அகற்ற வேண்டும். இது கப்பலின் ஆண்டு சோதனைக்கான முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்."என்று Shi Chun Xian கூறினார்.

பல ஆண்டுகளாக ஜிங்ஹாங் கால்வாயில் கப்பல் போக்குவரத்து பணியை மேற்கொண்டு வருகின்ற Dong Ye Sheng என்பவர், பழைய கப்பல்களைச் சீராக்கி மாற்றியமைப்பவர். எண்ணெய் நீர் ஆகியவற்றைப் பிரிக்கும் வசதிகள், மூடிய கழிவறை, சிறப்பான குப்பை சேகரிக்கும் வசதிகள் முதலிவற்றைக் கப்பல்களில் அவர் பொருத்தினார். தற்போது குப்பைகளை, வகைகளுக்கு ஏற்ப கட்டுப்படுத்தும் பழக்கவழக்கத்தை அவர் கடைப்பிடித்து வருகிறார். அவர் கூறியதாவது

"எண்ணெய், நீர் ஆகியவற்றைப் பிரிக்கும் வசதிகள் மூலம், பல்வேறு குப்பைகளை, பல வகைகளாகச் சேகரிக்க முடியும். குறிப்பிடத்தக்க வரையறையை எட்டினால், அவற்றை ஆற்றில் வெளியேற்றுவோம். இதர குப்பைகளை, துறைமுகத்தின் குப்பை சேகரிக்கும் நிலையத்தில் ஒப்படைக்கலாம். இந்த வழிமுறை கால்வாயில் ஓடும் அனைத்து கப்பல் உடைமையாளர்களும் முழுமையாகப் பின்பற்றினால், கால்வாயின் நீர் தரம் மேம்படும்."என்றார் அவர்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040