• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லிஜியாங் புறநகரிலுள்ள காட்சித் தலங்கள்
  2014-08-11 14:18:37  cri எழுத்தின் அளவு:  A A A   

தாபாவ்ஜி மாளிகையில், தற்போது 12 சுவர் ஓவியங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மிங் மற்றும் சிங் வம்சத்தின் தொடக்க காலத்தில் ஹான், திபெத், நாசி உள்ளிட்ட தேசிய இனங்களைச் சேர்ந்த ஓவியர்கள் இந்த ஓவியங்களை வரைந்தனர். அவை, நிறைய கலை நறுமணம் வீசுகின்றன. லிஜியாங் சுவர் ஓவியத்தில், தாபாவ்ஜி மாளிகையின் சுவர் ஓவியம் தலைசிறந்ததாக உள்ளது. பல மதங்கள் மற்றும் தேசிய இனங்களின் பாணிகளுடைய இந்த ஓவியம் மிக அரிது. ஹான் இன பௌத்த மதத்தின் பயபக்தி, நாசி இன தோங்பா மதத்தின் துணிச்சல், திபெத்தின லாமா மதத்தின் வண்ணமிகு நிறங்கள் ஆகியவை இந்த சுவர் ஓவியத்தில் காணப்படுகின்றன. மேலும், சுவர் ஓவியங்களில் வரையப்பட்ட வேட்டையாடுதல், மீன் பிடிப்பு, விறகு வெட்டுதல் முதலிய காட்சிகள் கலை மதிப்பு மிக்கவை, பார்வையிடத்தக்கவை. தாபாவ்ஜி மாளிகையில், நாட்டுப்புற கலைஞர்கள் அடிக்கடி இசை நிகழ்ச்சியை வழங்குகின்றனர். இசைக் கருவி வாசிப்பவர் உள்ளூர் கிராமவாசிகள் என்ற போதிலும், அவர்களின் அரங்கேற்றம் அன்பாகவும் இயற்கையாகவும் இருந்து, ரசிகர்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கும்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040