• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லிஜியாங் புறநகரிலுள்ள காட்சித் தலங்கள்
  2014-08-11 14:18:37  cri எழுத்தின் அளவு:  A A A   

ச்சியுன் கோயில், லாஷிபா இடத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. சிங் வம்சத்தில் கட்டப்பட்ட இந்த கோயில், லிஜியாங்கின் 5 புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகும். பசுமையான மலை மற்றும் மரங்களால் சூழப்பட்ட ச்சியுன் கோயிலில், மத குருமாரின் காலடித்தடம், மர்மமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. 180 வயதான ஒரு தேவதாரு மரம் மற்றும் 200 வயதான ஒரு சாகுரா மரம், இக்கோயிலுக்கு உயிராற்றல் ஊட்டுகின்றன. இங்கே சேமிக்கப்பட்ட மாயக்கலைக் கருவிகள், திபெத் மரபுவழி பௌத்தமதத்தின் தாங்கா ஓவியங்கள், புத்தர் ஓவியங்கள் உள்ளிட்ட பொருட்கள், இந்தக் கோயிலின் மத நறுமணத்தை அதிகரித்துள்ளன. கோயிலுக்கு முந்தைய படிக்கட்டில் நின்று, அழகான லாஷிஹாய் ஏரியையும் சுற்றுப்புறத்திலுள்ள விவசாய வீடுகளையும் புல்வெளியையும் கண்டு களிப்பதில், மனநிம்மதி மற்றும் உயிராற்றலை உணர்ந்து கொள்ளலாம்.


1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040