• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லிஜியாங் புறநகரிலுள்ள காட்சித் தலங்கள்
  2014-08-11 14:18:37  cri எழுத்தின் அளவு:  A A A   

கான்ஹாய்ச்சி எனும் இடத்தில், தரைக்கம்பளம் போன்ற புல்நிலம் காணப்படுகிறது. யுலோங் பனி மலையின் அடிவாரத்திலிருந்து தூரத்துக்கு இந்த புல்நிலம் விரிவாகிறது. யுலோங் பனி மலையின் முழு தோற்றத்தையும் கண்டு மகிழும் தலைசிறந்த இடம், கான்ஹாய்ச்சி தான். லிஜியாங் நகருக்கு சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் கான்ஹாய்ச்சி அமைந்துள்ளது. யுலோங் பனி மலையின் கிழக்கு அடிவாரத்திலுள்ள இவ்விடம், இயற்கையான பெரிய மேய்ச்சல் நிலமாகும். இங்கே வந்தால், விசாலமான புல்வெளியில் குதிரை சவாரி செய்யலாம். பனி மலர் ஓய்வு புகலிடத்தில் விளையாடலாம். யுலோங் பனி மலையிலுள்ள பனிக்கட்டிக்குச் செல்லும் கம்பிப்பாதையில் பனி காட்சிகளைக் கண்டு மகிழலாம். மேலும், லான்யூகு நாடக அரங்கில், லிஜியாங் பற்றிய மனப்பதிவு என்ற அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கலாம். சீனாவின் புகழ்பெற்ற திரைக் காட்சி இயக்குநர் ச்சாங்யிமோவ், பான்யுயே, வாங்சாவ்கே ஆகியோர் இந்நாடகத்தைக் கூட்டாக இயக்கினர். சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்த 10 நடிகர்கள் இயற்கை வண்ணத்தில் வழங்கிய அரங்கேற்றம் ரசிகர்களின் உள்ளத்துக்கு ஆச்சரியமூட்டும். இந்த நடிகர்கள் அனைவரும் தொழில் முறை சார் நடிகர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040