சரி, நம் பயணத்தை துவக்கலாம்.
ஆன்ஹுய் மாநிலம், சுருக்கமாக ஹுய் என அழைக்கப்படுகிறது. இம்மாநிலத்தின் தெற்கில் அமைந்துள்ள ஹுவாங்ஷான் மாவட்டம், பண்டையக் காலத்தில் சின்ஆன் என அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்துக்கு 2200க்கும் மேற்பட்ட ஆண்டுக்கால வரலாறு உள்ளது. இன்று, ஹுவாங்ஷான், உலகளவில் புகழ்பெற்ற இடம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன்? இங்கே ஹுவாங்ஷான் மலை, பண்டைய கிராமங்கள் உள்ளிட்ட உலக பண்பாடு மற்றும் இயற்கை மரபுச் செல்வங்கள் அமைந்துள்ளன. எனவே, இந்த உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் ஆண்டுதோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த அதிக பயணிகளை ஈர்த்து வருகின்றன.