ஷிதீ கிராமம்
மற்றொரு பண்டையக் கிராமமான ஷிதீ, நீண்டகால வரலாறு உடையது. பெய்சுங் வம்சக் காலத்தில் கட்டியமைக்கப்பட்ட இந்க கிராமம், 950 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்டது. கிராமத்தில் மூன்று சிறிய ஆறுகள் கிழக்குப் பகுதிலிருந்து மேற்குப் பகுதிக்குப் பாய்கின்றன். எனவே, பண்டையக்காலத்தில், ஷிதீ, ஷிஷி எனவும் அழைக்கப்பட்டது. வரலாற்றில் இக்கிராமத்தின் மேற்கில் 1.5கிலோமீட்டர் தொலைவில் அஞ்சல் நிலையம் நிறுவப்பட்டது. எனவே, ஷிதீ என்ற பெயர் பயன்படுத்தப்படத் துவங்கியது.