பண்டையக்கிராமமான ஹாங்சுன், சீனப் பராம்பரிய ஓவியத்திலுள்ள கிராமம் என்ற பெருமையை அடைந்துள்ளது. சீனாவின் சுங் வம்சக் காலத்தில் இக்கிராமத்தில் வாழ்ந்த மக்கள், அதன் நில அமைவின்படி செயற்கை நீர் பாயும் அமைப்பைக் கட்டினர். மேலும், மிங் மற்றும் ச்சிங் வம்சக் காலத்தில் கட்டியமைக்கப்பட்ட 140க்கு அதிகமான வீடுகள் இன்றும் இங்கு சிறப்பாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ஹாங்சுன் கிராமம்
ஏரி, மலை போன்ற இயற்கைக் காட்சிகளும், தனிச்சிறப்புடைய கட்டிடம் போன்ற செயற்கைக் காட்சிகளும் ஒன்றாகவும் இணக்கமாவும் இருப்பதை பார்த்த போது, பயணிகளுக்கு இனிய அதிர்ச்சி உடனடியாக ஏற்பட்டது.