எமது செய்தியாளர் குழு இம்மலையின் மேல் பகுதியில் உள்ள ஹோட்டலில் 2 நாட்கள் தங்கி இருந்தது. தொடர்ந்து பெய்ந்த மழை காரணமாக, இந்த சுற்றுலா தலத்தின் மிக மிக அழான காட்சிகள், குறிப்பாக மலையின் முழு காட்சியையும் காண முடியவில்லை. ஆனால், மேகமூட்ட கடல், ஞாயிறு மறைதல் போன்ற அரிய இயற்கைக் காட்சிகளை கண்டுகளித்து ரசிக்க முடிந்தது.
ஹுவாங்ஷான் மலையில் விந்தையான தேவதாரு மரம், வியப்பான கல், மேகக் கடல், வெப்ப ஊற்று, குளிர்காலத்தில் பனி ஆகிய 5 காட்சிகள், இங்குள்ள மிக அரிய காட்சிகளாக கருதப்படுகின்றன. இந்த அரிய காட்சிகள், இயற்கையில் உருவாகும் அற்புதங்களாகும். ஆனால், இந்த மலையின் வானிலை காரணமாக, இந்த 5 காட்சிகளையும் ஒருமுறை பயணத்தில் கண்டுகளிக்கும் வாய்ப்பு குறைவு என்று தெரிய வருகிறது. ஹுவாங்ஷான் மலையை மிகவும் விரும்பும் பயணிகள் சிலர், வசந்தக்காலம், கோடைக்காலம், இலையுதிர்காலம், குளிர்க்காலம் முறையே வேறுபட்ட காட்சிகளைக் கண்டு ரசிப்பர்.