லுங்சுவான் கிராமம்
ஹுவாங்ஷான் மலைப் பயணத்தை முடித்து கொண்டு எமது செய்தியாளர் குழு 3வது நாள் லுங்சுவான் கிராமம் வந்தடைந்தது. இந்த கிராமம், 1600க்கு அதிகமான ஆண்டுகள் வரலாறு கொண்டது. அழகான மலையும் ஆறுகளும் இந்த கிராமத்தை சுற்றி சிறந்த நிலஅமைவை உருவாக்கியுள்ளது. சீனாவின் பாரம்பரிய ஃபெங்சுய் கருத்தின்படி, இந்தக் கிராமம் மதிப்பு மிகுந்த இடமாகும். மேலும், தொலைநோக்குப் பார்வையில், பண்டைய கிராமத்தின் வரைப்படம், ஒரு படகு போல உள்ளது. 48 தலைமுறை ஹு குடும்பம் இங்கே ஒன்றுகூடி வாழ்கின்றன. எனவே, இந்த பெருமைகளுடன், இந்த பண்டைய கிராமத்தின் புகழ் படிப்படியாக பரவி வருகிறது. இன்று அதிக பயணிகள் வந்தடைந்து அழகான மற்றும் பண்டைய இக்கிராமத்தை பார்வையிட்டு, இது தொடர்பான பண்பாட்டையும் கதையையும் அறிந்து கொள்கின்றனர்.