• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹுவாங்ஷான் சுற்றுலா பயணம்
  2013-06-03 15:22:34  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவில் சுற்றுலா மேற்கொள்ளும் நண்பர்கள் ஆவலுடன் ஹுவாங்ஷான் சென்றால், பெய்ஜிங், ஷாங்காய் ஆகிய மாநகரங்களில் இருந்து விமானம் மூலம் அல்லது சூசோ, ஹாங்சோ நகரங்களில் இருந்து பேருந்து மூலம் நேரடியாக அங்கு சென்றடைலாம். போக்குவரத்து வசதியாக உள்ளது. ஹுவாங்ஷான் மாவட்டம் அடைந்த பின், பேருந்து மூலம் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கிடையே வந்துச் செல்லலாம். நீங்கள் ஹுவாங் ஷான் பயணத்தை துவக்கும் முன்பு, நண்பர்களே ஹுவாங்ஷான் சுற்றுலா தலத்தின் வானிலையை உறுதியாக அறிய வேண்டும். ஹுவாங்ஷான் மலையில் மழை அடிக்கடி பொழியும். எனவே, சிறந்த வானிலை உள்ள போது, நீங்கள் இன்ப பயணம் மேற்கொள்ள துவங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஹுவாங்ஷான் பயணத்தில் அதிக இடங்களைப் பார்வையிட்டேன். ஆனால், இன்றைய நிகழ்ச்சியில் முக்கிய அனுபவங்களை மட்டுமே நேயர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

நேயர்களே, ஹுவாங்ஷான் மலை, லுங்சுவான், ஹாங்சுன், ஷிதீ ஆகிய இடங்களில் பயணம் பற்றிய கட்டுரையும் அருமையான நிழற்படத் தொகுப்பும், தமிழ்ப் பிரிவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விபரங்களைப் படிக்க, நீங்கள் இணையதளத்தில் உலா வருங்கள்.

நேயர்கள், ஹுவாங்ஸான் சுற்றுலா தொடர்பாக உங்களுக்கு எந்த விதமான கேள்வி எழுந்தாலும், மின்னஞ்ல் மூலம் எனக்கு கடிதம் அனுப்புவதை வரவேற்கின்றேன். நான் ஆக்கமுடன் உங்களின் கேள்விக்கு உடனடியாகப் பதில் தருவேன். எனது அனுபவமும் முன்மொழிவுகளும் எதிர்காலத்தில் உங்களின் பயணத்தில் பங்காற்றும் என்று நம்புகின்றோம்.


1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040