சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் உறுப்பினரை ஷிச்சின்பிங் சந்திப்பு

2024.03.06 16:15:16

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங், மார்ச் 6ஆம் நாள் பிற்பகல், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 2ஆவது கூட்டத்தொடரில் பங்கெடுத்துள்ள சீன குவோமின்டாங்கின் புரட்சிகர குழு, அறிவியல் தொழில் நுட்பத் துறை, சுற்றுச் சூழல் மூலவளத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்களைச் சந்தித்தார்.