பிரிக்ஸ் நாடுகளின் தலைவர் பதவி வகிக்கும் நாடாக சீனா பொறுப்பு ஏற்றுள்ள காலத்தில் நடைபெற்ற 2ஆவது பிரிக்ஸ் நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி தலைவர்கள் கூட்டம் 19ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது.
பிரிக்ஸ் நாடுகளின் அரசியல் கட்சிகள், சிந்தனைக் கிடங்குகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் கருத்தரங்கு 11ஆம் நாள், தெற்கு சீனாவின் ஃபூச்சியாங் மாநிலத்தின் ஃபூசௌ நகரில் நடைபெற்றது. பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பு அமைப்புமுறை உருவாக்கப்பட்ட பிறகு, இத்தகைய கருத்தரங்கு நடைபெறுவது இதுதான் முதல்முறை.
2017ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களின் முதலாவது கூட்டம் 23ஆம் நாள் சீனாவின் நான்ஜிங் நகரில் துவங்கியது. 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் தொட்டு, சீனா இவ்வமைப்பின் தலைவர் நாடாக பதவி ஏற்றது. வரும் செப்டெம்பர் திங்களில் சியாமன் நகரில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது 9ஆவது சந்திப்பை வரவேற்கும் பொருட்டு, நடப்பு கூட்டம் நடத்தப்பட்டது.