பொது நிலை
பெய்ஜிங் மாநகரம், சுருக்கமாக ஜிங் என்று கூறலாம். பெய்ஜிங், சீந மக்கள் குடியரசின் தலைநகராகும். அது, 3000க்கு மேலான ஆண்டுகளுக்கு முன் கட்டியமைக்கப்பட்டது. தலைநகரமாக கொள்ளப்பட்ட வரலாறு, சுமார் 850 ஆண்டுக்காலமாகும். வரலாற்றில், லியாவ், ஜின், யுவான், மிஹ், ச்சிங் ஆகிய 5 வம்சங்களும் பெய்ஜிங்கைத் தலைநகராகக் கொண்டன. தற்போது, பெய்ஜிங், உலகில் மிக அதிகப் பண்பாட்டு மரபுச் செல்வத் தலங்களைக் கொண்டுள்ள நகரம் மட்டுமல்ல, சீனாவின் 2வது மிக பெரிய மாநகரமும் ஆகும்.