சுற்றுலாக் காலநிலை
பெய்ஜிங்கின் காலநிலை, உதாரணமாக, பெருநிலப்பகுதி காலநிலையாகும். வசந்த காலத்தில் காற்று அதிகமாக வீசுகிறது. சில சமயம் மணல்காற்று வீச்சுக்கள் நிகழ்கின்றன. கோடைக்காலம் மிக வெப்பமானது. குளிர்க்கால வானிலை, குளிராகவும் வறட்சியாகவும் உள்ளது. எனவே, இலையுதிர்காலம், பெய்ஜிங்கில் சுற்றுலா செய்வதற்குத் தலைசிறந்த பருவமாகும். அப்போது, சியாங் ஷென்(XiangShan) மலையில் சிவப்பான மேபில்(maple) மரங்களைக் கண்டுரசிக்கலாம்.