• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சுற்றுலா வழிக்காட்டி:பெய்ஜிங் மாநகரம்
  2013-03-14 17:01:17  cri எழுத்தின் அளவு:  A A A   

போக்குவரத்து

பெய்ஜிங்கில், தற்போது 14 சுரங்க இருப்புப்பாதைகள் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டுள்ளன. இலக்கு, 1,2,4,5,8,10,13,15 நெறிகளைத் தவிர, பாதுங்(BaTong), ச்சாங்பீங்(ChangPing), தாசிங்(DaXing), ஃபாங்ஷென்(FangShan) ஆகிய புறநகர் நெறிகளும் இயங்கி வருகின்றன. அவற்றின் பயணச்சீட்டு விலை, 2 யுவானாகும். தவிரவும், விமான நிலைய சிறப்பு நெறி துவங்கியுள்ளது. அதன் பயணச்சீட்டு விலை 25 யுவான். பயணச்சீட்டும், போக்குவரத்து அட்டையும் பயன்படுத்தப்படலாம்.

1ம் இலக்கு நெறி, பிங்கோயுவான்(PingGuoYuan) நிலையத்துக்கும், சிஹுய் கிழக்கு(SiHuiDong) நிலையத்துக்கும் இடையே போகிறது. அதில், தியென்ஆன்மன் கிழக்கு(TianAnMen Dong), தியென்ஆன்மன் மேற்கு(TianAnMen Xi), சிதென்(XiDan), வாங்ஃபூஜிங்(WangFuJing), இராணுவ அருங்காட்சியகம்(JunShi BoWuGuan) முதலிய நிலையங்களின் அருகில் காட்சித் தளங்கள் உள்ளன.

2ம் இலக்கு நெறி, சிச்சிமன்னுக்கும்(XiZhiMen) ச்சிஷுய்தென்னுக்கும்(JiShuiTan) இடையே வட்டமாக போகிறது. இந்த நெறியில், ச்சியென்மன்(QianMen), லாமா கோயில்(YongHeGong), முரசு மாளிகைப் பாதை(GuLouDaJie) முதலிய நிலையங்களில் இறங்கி காட்சி இடங்களுக்குப் போகலாம்.

4ம் இலக்கு நெறி, குங்யிசிச்சியோக்கும்(GongYiXiQiao) ஆன்ஹெச்சியோ வடக்கிற்கும்(AnHeQiaoBei) இடையே போகிறது. இந்நெறியில் சிதென்(XiDan), விலங்கியல் பூங்கா, தேசிய நூலகம், பெய்ஜிங் பல்கலைக்கழகம் முதலிய இடங்கள் பார்வையிடத்தக்கவை.

5ம் இலக்கு நெறி, தியெதுங்யுவன் வடக்கிற்கும்(TianTongYuan Bei), சுங்ஜியாச்சுவங்கும்(SongJiaZhuang) இடையே போகிறது. லாமா கோயில்(YongHeGong), துங்சி(DongSi), சொர்க்க கோயில்(TianTan) முதலிய நிலையத்தின் அருகில் காட்சி இடங்கள் அமைந்துள்ளன.

8ம் இலக்கு நெறி, பெய்துச்சங்கிற்கும்(BeiTuCheng) ஒலிம்பிக் வனப் பூங்காக்கும் இடையே போகிறது. அது, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுக்காக சிறப்பாகக் கட்டியமைக்கப்பட்ட சுரங்க இருப்புப் பாதையாகும். அது ஒலிம்பிக் விளையாட்டு மையம், ஒலிம்பிக் வனப்பூங்கா முதலிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான முக்கிய இடங்களை இணைக்கின்றது.

10ம் இலக்கு நெறி, பாக்கோ(BaGou) நிலையத்துக்கும் ச்சின்சுங்(JinSong) நிலையத்துக்குமிடையில் போகிறது. லியங்மாச்சியொ(LiangMaQiao), சர்வதேச வர்த்தக மையம் முதலிய நிலையங்களுக்கு அருகில் காட்சி இடங்கள் உள்ளன.

பேருந்து

பெய்ஜிங்கின் பேருந்துகளின் பயணச்சீட்டு, 2 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று, ஒரு யுவான். இன்னொன்ரு, பயணத்தின் நீளத்தின்படி கணக்கிடப்படுகிறது. பயணச்சீட்டு விலை குறைந்தது 1 யுவானாகும். நீங்கள் IC அட்டையைப் பயன்படுத்தினால், 40 விழுக்காடு கட்டணம் மட்டும் வழங்க வேண்டும்.

டாக்சி

பெய்ஜிங்கில் டாக்சியில் பயணம் செய்ய 3 அம்சங்களைக் கவனிக்க வேண்டும்.

ஒன்று, 3 கிலோமீட்டருக்கு 10 யுவான். இந்த தூரத்தை தாண்டினால் கிலோமீட்டருக்கு 2 யுவான் வழங்க வேண்டும்.

இரண்டு, இரவு 11 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 5 மணி நேரம் வரை, 3 கிலோமீட்டருக்கு 11 யுவான். தவிர, கட்டணத்தின் 20 விழுக்காடு மேலதிகமாக வழங்க வேண்டும்.

மூன்று, வாகனங்களின் மேல் விளக்கினால் டாக்சி தொழில்நிறுவனங்களின் பெயர்கள் உள்ளன. பெய்ச்சி(Beiqi), ஷோச்சி(ShouQi) முதலிய பெரிய தொழில் நிறுவனங்களின் வாகனங்களைப் பரிந்துரை செய்கிறோம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040