கோடைக்கால மாளிகை(YiHeYuan)---சீனாவின் மிக பெரிய அரண்மனைப் பூங்கா
ஹெபெய்(HeBei) மாநிலத்தின் கோடை மாளிகை, சூசோ(SuZhou) நகரத்தினஅ ச்சுவொச்சங் பூங்கா(ZhuoZhengYuan), சூசோ நகரத்தின் லியு பூங்கா(LiuYuan) ஆகியவற்றுடன் அழைக்கப்படுகிறது. ச்சிங் வம்சத்தில் அது கட்டியமைக்கப்பட்டது. அதன் நிலப்பரப்பு 250 ஹெக்டராகும். ச்சிங் வம்சத்தின் ச்சிசீ(CiXi) என்ற அரசி தமது முதுமைக்காலத்தை இங்கு கழித்தார்.
ஹங்சோ(HangZhou) நகரத்தின் சி ஹு(XiHu) எனும் ஏரியைப் போல, இப்பூங்கா கட்டியமைக்கப்பட்டது. குன்மிங் ஏரி(KunMingHu), வான்சோ மலை(WanShouShan), 17 துளைப் பாலம்(ShiQiKongQiao), சூசோ பாதை(SuZhouJie) ஆகியவை, இங்குள்ள காட்சி இடங்களாகும். அது ஒரு மாபெரும் பூங்கா. அரண்மனைப் பூங்காவின் சிறப்பான பாணியைக் கொண்ட அது, அரண்மனை பூங்காக்களின் அருங்காட்சியகமாக அழைக்கப்படுகிறது.
வாங்ஃபூஜிங்(WangFuJing)---பெய்ஜிங்கில் மிக புகழ் பெற்ற வணிகப் பாதை வாங்ஃபூஜிங்
தியென் ஆன் மன் சதுக்கத்தின் கிழக்கில் அமைகிறது. அது, 700க்கு மேலான ஆண்டுகால வரலாறுடைய புகழ்பெற்ற வணிகப் பாதையாகும். தங்கப் பாதை என்ற கௌரவம் அதற்குரியது. இந்த வணிகப் பிரதேசத்தில், வூயுதென், ருய்ஃபுசியங், சங்குச்செய், சங்சிஃபு முதலிய நீண்ட வரலாறுடைய பழங்காலக் கடைகள் அமைந்துள்ளன. தவிர, நவீனமயமான ஷாப்பிங் மால்கள் இங்கு உள்ளன. பயணிகள் இப்பாதையைக் கண்டுரசித்ததோடு, பல வணிகப் பொருட்களையும் கொள்வனவு செய்யலாம்.