சொர்க்கக் கோயில் பூங்கா(TianTan GongYuan)
ச்சிங் வம்சத்தின் மன்னர்கள் சொர்க்கக் கோயிலில் அறுவடைக்காகப் பிரார்த்தனை செய்தனர். இங்கு, வட்டக் கோயில்(YuanQiu), ஹுவங்ச்சுங்யு(HuangQiongYu), அறுவடை பிரார்த்தனைக் கோயில்(QiGuDian), ச்சினியென்தியென் மாளிகை(QiNianDian), எதிரொலிச் சுவர்(HuiYinBi) ஆகியவை உள்ளன.
சொற்க்கக் கோயிலைத் தவிர, இப்பிரதேசத்தில் லுங்தென்(LongTan) பூங்கா, இயற்கை அருங்காட்சியகம், மிங் வம்ச நகரச் சுவர் சிதிலப் பூங்கா, முத்துச் சந்தை முதலியவை இருக்கின்றன. முத்துச் சந்தையில், சீன தனிச்சிறப்பு வாய்ந்த கைவினைப் பொருட்கள், நினைவுப் பொருட்கள் முதலியவை விற்கப்படுகின்றன. அது, வெளிநாட்டவர்கள் மிகவும் வரும்புகின்ற சந்தையாகும்.