அரண்மனை அருங்காட்சியகம்(GuGong)---உலகின் மிக பெரிய 5 அரண்மனைகளில் முதலாவது
அரண்மனை அருங்காட்சியகம், தியென் ஆன் மனின் வடக்கில் உள்ளது. அது, Forbidden City எனவும் அழைக்கப்படுகிறது. அது, மிங் மற்றும் ச்சிங் வம்சங்களின் அரண்மனையாகும். தற்போது அது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. பிரம்மாண்டமானக் கட்டிடத் தொகுதிகள், மதிப்புக்குரிய தொல்பொருட்கள் ஆகியவற்றால், அது, சீனாவின் மிக பெரிய பழங்காலக் கட்டிடத் தொகுதியாக மாறியுள்ளது மட்டுமல்ல, உலகின் மிகப் பெரிய 5 அரண்மனைகளில் முதலிடமும் வகிக்கிறது.
இந்த அருங்காட்சியகம், சீனாவில் மிக அதிகத் தொல்பொருட்களைக் கையிருப்பு செய்த அருங்காட்சியகமாகும். சீன முழு நாட்டின் 6 தொல்பொருட்களில் ஒன்று இங்கு வைக்கப்பட்டது. சில மாண்டபத்தில், வெண்கலப் பொருள், நகைகள் முதலியவற்றின் சிறப்பான கண்காட்சிகள் நடைபெற்று வருகின்றன. பயணிகள் பழங்காலக் கட்டிடக் கலையை ரசிக்கின்ற அதே வேளை, பழங்கால மதிப்புக்குரிய பொருட்களையும் பார்க்கலாம்.
தெய்ஹெதியென்(TaiHeDian), ச்சுங்ஹெதியென்(ZhongHeDian), பாவ்ஹெதியென்(BaoHeDian) ஆகியவை, இங்கு பார்க்க வேண்டிய 3 முக்கிய மண்டபங்களாகும்.