ஹூதுங்(HuTong)---பெய்ஜிங்கின் வேர்
ஹூதுங் என்பதற்கு, சிறிய குறுகிய பாதை அல்லது சந்து என்று பொருள். அது, பாரம்பரிய பெய்ஜிங் பண்பாட்டின் தனிச்சிறப்பு ஆகும். பாரம்பரிய பெய்ஜிங்கை அறிய, ஹூதுங்களில் சுற்றுலா செய்வது இன்றியமையாததாகும்.
பெய்ஜிங்கில் ஆயிரக்கணக்கான ஹூதுங்கள் உள்ளன. துங்ஜியோமின்சியாங்(DongJiaoMinXiang), பெய்ஜிங்கின் மிக நீளமான ஹூதுங் ஆகும். அது, சீன வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியைப் பதிவு செய்துள்ளது. ச்சியென்ஷி ஹூதுங்(QianShi HuTong), பெய்ஜிங்கின் மிகக் குறுகிய ஹூதுங் ஆகும். பெய்ஜிங்கின் நிதிச் சந்தை, மிக முன்னதாக இங்கு உருவாக்கப்பட்டது. லிங்ஜிங் ஹூதுங்(LingJing HuTong), மிக அகலமான சந்து ஆகும். 4 வாகனங்கள் ஒரே நேரத்தில் ஓட முடியும். செய்ஷிகொ(CaiShiKou) ஹூதுங்கில் பல இலக்கியவாதிகளும், கலைஞர்களும் வாழ்ந்தனர். தவிரவும், ஜின்யு ஹூதுங்(JinYu HuTong), பாதா ஹூதுங்(BaDa HuTong), மொர் ஹூதுங்(Maoer HuTong) முதலியவையும் பார்க்கத்தக்கவை. பெய்ஜிங்கின் நீண்ட வரலாறும் பாரம்பரியப் பண்பாட்டுச் சூழ்நிலையும் ஹூதுங்களில் உருவாக்கப்பட்டன.