பண்பாடு
பெய்ஜிங்கின் பண்பாடு பற்றிப் பேசும் போது, ஹூதுங் பண்பாட்டைக் குறிப்பிடுவது தவிர்க்க முடியாதது. ஹூதுங் என்றால், சிறிய பாதை அல்லது சந்து என்று பொருள். பெய்ஜிங்கில் 7000க்கு மேலான சந்துகள் உள்ளன. அவை, பெய்ஜிங்கின் நகரக் காட்சியை அலங்கரித்து, இந்நகரில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பதிவு செய்கின்றன. பல சந்துகளில், சிஹெயுவான்(SiHeYuan), அதாவது, பெய்ஜிங்கின் தனிச்சிறப்பு வாய்ந்த நாற்கோணக் குடிசைகள் உள்ளன. சிஹெயுவான்(SiHeYuan), பெய்ஜிங்கின் சிறப்பான கட்டிடப் பாணியாகும். அவை, பாரம்பரிய பெய்ஜிங் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்ததோடு, பெய்ஜிங் நகரத்தின் பண்பாட்டு பரம்பரையையும் செழிப்பாக்குகின்றன.