கோச்சிச்சியன் பாதை
கோச்சிச்சியென்(GuoZiJian), சீனாவின் பேரரசுப் பள்ளியாகும். அது அமைந்துள்ள இப்பாதை, பெய்ஜிங்கில் ஒரே ஒரு வில்வளைவுப் பாதையாகும். பழங்கால மரங்கள் இரு பக்கங்களிலும் நடப்பட்டுள்ளன.
சிஹெயுவான் என்ற நாற்கோணக் குடிசைகள், இங்குள்ள முக்கியக் கட்டிடங்களாகும். அதைத் தவிர, கன்ஃபியூஷியஸ் கோயில்(KongMiao), இப்பாதையை அடையாளப்படுத்தும் கட்டிடமாகும். இப்பாதையின் வடக்கில் திதென்(DiTan)பூங்காவும், திபெத் மரப் புத்த மதத்தின் கோயிலான லாமா கோயிலும்(YongHeGong)அமைந்துள்ளன.