பார்க்க வேண்டிய காட்சி இடங்கள்
தியென் ஆன் மன் சதுக்கம்(Tian'AnMen GuangChang)---உலக மிகப் பெரிய நகரச் சதுக்கம்
பெய்ஜிங் மாநகரம், சீனாவின் மையமாக இருப்பதென் கூறினால். தியென் ஆன் மன் சதுக்கம், பெய்ஜிங்கின் மையமாக இருப்பதென சொல்லலாம். அது, பெய்ஜிங் மாநகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. அதன் தெற்கு-வடக்கு நீளம், 880 மீட்டராகும். கிழக்கு-மேற்கு அகலம் 500 மீட்டராகும். நிலப்பரப்பு, 4 இலட்சத்து 40 ஆயிரம் சதுர மீட்டராகும். அது, உலகளவில் மிக பெரிய நகரச் சதுக்கமாகும்.
தியென் ஆன் மன் கோபுர வாயில், மக்கள் மகாமண்டபம், மாவ்செதுங்(Mao ZeDong)நினைவு மண்டபம், சீனத் தேசிய அருங்காட்சியகம், மக்கள், வீரர் நினைவுத் தூண் ஆகிய பெய்ஜிங்கின் அடையாளங்களாக விளங்கும் 5 கட்டிடங்கள், இச்சத்துக்கத்தில் அமைந்துள்ளன. நாள்தோறும் சூரியன் எழுகின்ற போது பல்வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள் இங்கு கூடி நாட்டுக் கொடியைப் பறக்கவிடும் விழாவைப் பார்வையிடுகின்றனர்.