பறவைக்கூடும்(NiaoChao) நீர் கனசதுரமும்(ShuiLiFang)---பெய்ஜிங்கின் புதியக் கட்டிடச் சின்னங்கள்
பறவைக்கூடு(NiaoChao), சீனாவின் தேசிய விளையாட்டு அரங்கமாகும். நீர் கனசதுரம், தேசிய நீச்சல் மையமாகும். அவை, பெய்ஜிங்கு வருகை தந்தவர்கள் பார்க்க வேண்டிய இடங்காக மாறியுள்ளன. வானம் வட்டமானது. நிலம், சதுரமானது என்பது சீனப் பாரம்பரியப் பண்பாட்டின் முக்கியக் கருத்தாகும். இவ்விரு இடங்கள், அக்கருத்துக்கு மிக உகந்தவையாக விளங்குகின்றன. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சின்னக் கட்டிடமாக, பறவைக் கூடு(NiaoChao), 2007ம் ஆண்டு உலக 10 கட்டிட அற்புதங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டது. நீர் கன சதுரம்(ShuiLiFang), 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முக்கிய அரங்குகளில் ஒன்றாகும். ஒலிம்பிக் பூங்காவில், அவற்றைத் தவிர, சீன விசிறியின் வடிவத்தில் கட்டியமைக்கப்பட்டத் தேசிய விளையாட்டு மைதானம், ஒலிம்பிக் வனப் பூங்கா, சீனத் தேசிய இனத் தோட்டம் முதலியவையும், சுற்றுலா செய்யத்தக்க இடங்காகும்.