|
|
சிறப்பு கோவா பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் முன்மொழிவுகள் மந்தமான நிலையிலுள்ள உலக பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கு அவர் 5 முன்மொழிவுகளை முன்வைத்தார். கட்டமைப்புச் சீர்திருத்தத்தின் மூலம், வெளிநாடுகளுக்குத் திறக்கும் பொருளாதார வளர்ச்சிமுறையை உருவாக்குதல், தெற்கு-வடக்கு மற்றும் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுபடுத்துதல், இயற்கை சீற்றம், காலநிலை மாற்றம், தொற்று நோய் பரவல், பயங்கரவாதம் முதலிய உலகளாவிய பிரச்சனைகளைக் கூட்டாகச் சமாளித்தல், கூட்டு பயன் தரும் புதிய பன்னாட்டுறவை உருவாக்குதல், பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி மற்றும் முன்னெச்சரிக்கை கையிருப்பு என்ற அமைப்புமுறையைச் சிறப்பாக இயக்குதல் ஆகியவை இந்த 5 முன்மொழிவுகளாகும்.
| |
|